பூவே உனக்காக சீரியலில் தனுஷ் பட நாயகி ஒருவர் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

Saya Singh Entry in Poove Unakaga :

தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பூவே உனக்காக. இந்த சீரியலில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பூவே உனக்காக சீரியலில் என்ட்ரி கொடுக்கப்போகும் தனுஷ் பட நாயகி - யார் தெரியுமா??

இந்த நிலையில் இந்த சீரியலில் தனுஷ் பட நாயகி ஒருவர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை திருடா திருடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாயா சிங் என தெரியவந்துள்ளது.

இவருடைய கணவர் கிருஷ்ணாவும் சீரியல் நடிகர் தான். தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர் தற்போது தாலாட்டு என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.