satish
வனிதா விஜயகுமாரை கிண்டலடித்து நகைச்சுவை நடிகர் சதீஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.

Satish comment against vanitha vijayakumar – நேற்று சிறப்பு விருந்தினராக வீட்டிற்கு வந்த வனிதா ‘தர்ஷன் வெளியேறியதற்கு நீதான் காரணம்’ எனக் கூறி நடிகை ஷெரினை அழ வைத்தார். ஷெரினுக்கு ஆதரவாக கஸ்தூரி, சாக்‌ஷி, சேரன் என பலரும் களமிறங்கியும் வனிதா எதையும் கண்டு கொள்ளவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக டல் அடித்த பிக்பாஸ் மீண்டும் பரபரப்பானது. ஆனால், சமூக வலைத்தளங்களில் பலரும் வனிதாவை திட்டித் தீர்த்தனர்.

கவினுக்கு பதில் லாஸ்லியா என்னை அறையட்டும் – கவினை அறைந்த நண்பர் டிவிட்

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ நீ பன்னது தப்புன்னு நான் சொல்லல. ஆனா நீ பன்னது தப்பு. உன்னால தர்ஷன் வெளிய போகல. ஆனா சத்தியமா உன்னாலதான் வெளிய போனான். எல்லாரும் அவங்க கருத்த சொல்லுங்க.. ஆனா, நான் யாரையும் பேச விட மாட்டேன்’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அவர் வனிதாவின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அவரைத்தான் சதீஷ் கிண்டலடிக்கிறார் என்பதை நெட்டிசன்கள் புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.