Sathya Sai Joined in Pandian Stores
Sathya Sai Joined in Pandian Stores

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதியதாக சீரியல் நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

Sathya Sai Joined in Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஸ்டாலின் சுஜிதா குமரன் சித்ரா வெங்கட் ஹேமா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

கடந்த வாரம்தான் ஹேமாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்ந்து அவருக்கு சீரியலில் பெண் குழந்தை பிறந்துள்ளது. நிஜத்திலும் கர்ப்பமாக இருந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரசவத்தின் காரணமாக தற்போது சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் செல்ல குட்டியாக கண்ணன் என்ற வேடத்தில் நடித்து வருபவர் சரவணன்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?? – இணையத்தில் வெளியான தகவல்

தற்போது இவருக்கு ஜோடியாக நடிக்க இந்த சீரியலில் சத்யா சாய் என்பவர் கமிட் ஆகியுள்ளார். நேற்று தான் இவருடைய முதல் எபிசோட் ஒளிபரப்பானது.

முதல் எபிசோடுக்கு சத்யா சாய்க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து அவர் தனக்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு நன்றி கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.