Sathuranga Vettai 2 Release

எச் வினோத் கதையில் உருவான படம் 3 வருடத்திற்கு பிறகு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sathuranga Vettai 2 Release : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வினோத். சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலமாக அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த இவர் அடுத்ததாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற போலீஸ் கதையில் அனைவரையும் மிரள வைத்திருந்தார்.

சதுரங்கவேட்டை படத்தின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் வினோத்திடம் இருந்து சதுரங்க வேட்டை 2 படத்தின் கதையை எழுதி வாங்கிக் கொண்டு புதுமுக இயக்குனரை வைத்து இயக்கினார்.

படக்குழுவின் அதிரடியான பிளான்.. மாஸ்டர் மற்றும் வலிமை படம் ரிலீஸ் எப்போது தெரியுமா?? – இதோ விவரம்

இந்த படத்தில் அரவிந்த்சாமி, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் மனோபாலா செய்த சிறு குளறுபடியால் படத்தின் நாயகனான அரவிந்த்சாமி படத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதன் காரணமாக 2017 இல் இருந்து கிடப்பில் வந்த இப்படம் தற்போது OTT வழியாக வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.