காமெடி நடிகர் சதிஷ் உடல் எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதிஷ். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமானது. திருமண நாள் அன்றே அவர் தலைவர் 168 படத்தில் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியானது.
மேலும் சதிஷ் இந்தியன் 2 படத்திலும் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் திருமணத்திற்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார் சதிஷ்.
அவர் ஒல்லியாகியுள்ள புகைப்படத்தை அவரே இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் லோ பட்ஜெட் சதிஷ் எனவும் அவரின் உதடு லிப்ஸ்டிக் போட்டார் போல இருப்பதால் ஏன்பா லிப்ஸ்டிக் போடுற எனவும் கலாய்த்து வருகின்றனர்.