பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறார் சதீஷ்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் முக்கிய பலமாக இருந்து வருகிறது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தான்.

அவருடைய நடிப்புதான் இந்த சீரியலின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வரும் கோபி தற்போது இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆமாம் இந்த சீரியலில் இருந்து இன்னும் பத்து பதினைந்து எபிசோடுகளில் விலகி விடுவேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்துள்ளார் சீரியலில் இருந்து விலக பல காரணங்கள் உள்ளன. ஆனால் என்னுடைய தனிப்பட்ட காரணங்களால் விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

கோபி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு நன்றி தெரிவித்துள்ளார். என்னுடைய ரோலை இதுவரை சிறப்பாக செய்து மக்களை மகிழ்வித்துள்ளேன் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.