
மீண்டும் பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங்கில் கோபி கலந்து கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Sathish Photo from Baakiyalakshmi Serial Shooting : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபியாக நடித்து வருகிறார் சதீஷ்.

இந்த சீரியலில் முக்கிய பில்லராக இருந்து வரும் சதீஷ்குமார் சீரியலில் இருந்து விலகப் போவதாக வீடியோ வெளியிட்டிருந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அவருக்கு பதிலாக வரும் நாட்களில் நடிகர் பப்லு நடிக்க உள்ளார் எனவும் தகவல் பரவியது.
இப்படியான நிலையில் சதீஷ் மீண்டும் பாக்கியலட்சுமி சீரியல் சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வேற என்ன சரக்கு சீன் தான் என சொல்லி அந்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

இதனால் சதீஷ் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் தனது முடிவை மாற்றிக் கொண்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.