Sathish in Lady Gettup With Daughter

மனைவி வெளியே போன நேரத்தில் மகளை சமாதானப்படுத்த சதீஷ் செய்த வேலை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Sathish in Lady Gettup With Daughter : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்திலும் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தற்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடிக்கிறார்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா-சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதி?

இவர் பிரபல இயக்குனர் ஒருவரின் தங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் சதீஷ்க்கு ஒரு மகளும் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அடிக்கடி தன்னுடைய மகளுடன் செய்யும் சேட்டைகளை புகைப்படமாக வெளியிட்டு வருகிறார் சதீஷ்.

செம Jolly ஆக கலாய்த்த Karu Pazhaniappan – மேடையில் விழுந்து விழுந்து சிரித்த MP.Kanimozhi

அந்த வகையில் தன்னுடைய மனைவி வெளியே சென்றிருந்த போது குழந்தை எழுந்து தன்னுடைய அம்மாவை கேட்டு அடம் பிடிக்கும் என்பதால் அவரை சமாதானப் படுத்துவதற்காக பெண் வேடம் அணிந்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டு இனி அம்மாவை கேட்ப? என காமெடியாக பதிவு செய்துள்ளார். சதீஷின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.