Sathish Doing this in Hero : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Arjun | Sathish

Sathish Doing this in Hero :

உன்னாலே உன்னாலே படத்துக்கு பின் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்தில் படப்பிடிப்புக்கு வந்திருப்பதாக சதிஷ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸ்ராக நடிப்பதாகவும் இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும் சொல்லியிருந்தோம்.

அரசியலில் நுழையும் எண்ணத்தில் சினிமா பயணம் – ஆர் ஜே விக்னேஷ் ஓபன் டாக்

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இப்படத்தில் இவானா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகரும் பிரபல டான்ஸ் மாஸ்டருமான சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு தற்போது படமாக்கி வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள சிட்டி செண்டரில் நடைபெற்று வருகிறது. உன்னாலே உன்னாலே படத்துக்கு பின் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்தில் படப்பிடிப்புக்கு வந்திருப்பதாக சதிஷ் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.