ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே விற்பனையாகியுள்ளது தளபதி 66 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்.

Satellite Rights of Thalapathy66 Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கொலைவழக்கில் கைதான, மல்யுத்த வீரரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே விற்பனையான தளபதி 66 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் - வெளியான மரண மாஸ் தகவல்.!!

இந்த படத்தை முடித்த பின்பே தளபதி விஜய் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தினை எழுதி இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். இவர் இதற்கு முன்னதாக தமிழ் நாகர்ஜுனா மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா என்ற படத்தை இயக்கி இருந்தார்.

Media-வை பார்க்கறதுக்கு பயம் – Actor Prabhu Deva Speech | Bagheera Trailer Launch | HD

விஜய் மற்றும் வம்சி இணைய உள்ள இப்படத்தின் சூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்குள் இந்தப் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை தமிழ், தெலுங்கு என இரண்டையும் சேர்த்து ரூபாய் 50 கோடிக்கு சன் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு படம் தொடங்குவதற்கு முன்பாகவே அந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டு இருப்பது விஜய் ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.