
மிகப்பெரிய தொகைக்கு விடுதலை படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளது இரண்டு நிறுவனங்கள்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. சூரி நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்துவரும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி தொடர்ந்து சூட்டிங் தாமதமாகி வந்த நிலையில் தற்போது இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு எடுத்து அதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
அடுத்த மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பழத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை பிரபல OTT தளமான ஜி5 கைப்பற்றி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த இரண்டு படங்களும் விடுதலை படத்தின் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.