SASIKUMAR

SasiKumar : கடந்த 2011 ஆண்டு முதல் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது 201 மேற்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் / இயக்குனரான சசிகுமார் அவர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதினை வழங்கியுள்ளது.

பொள்ளாச்சியில் தன் படப்பிடிப்பில் (sasikumar19 ) இருந்த சசிகுமார் அவர்கள் விருது வழங்கிய தமிழக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பரிந்துரையின்படி , இயல் இசை , நாடகம் , கிராமியம் , திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற கலைப்பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருதுபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.