ரஜினியின் பாராட்டு குறித்து நடிகர் சசிகுமார் பகிர்ந்திருக்கும் ட்விட்டர் போஸ்ட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் கடந்த மாதம் ‘அயோத்தி’ திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் சமீபத்தில் இப்படத்தை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவு வைரலானது. தற்போது இதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு இருக்கும் சசிகுமாரின் நெகிழ்ச்சியான பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், “நடிகர் என்று குறிப்பிடாமல் நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் சார். எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்து பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது. மிக்க நன்றி சார்”. என குறிப்பிட்ட தெரிவித்திருக்கிறார்.