நடிகர் கார்த்திக்கு வில்லியாக பிரபல நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sarthar Movie Villi Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று சர்தார். இந்த படத்தினை இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்குகிறார்.

நடிகர் கார்த்திக்கு வில்லியாக களமிறங்கும் பிரபல நடிகை - வெளியான அதிரடி அப்டேட்

இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு வில்லியாக நடிக்க நடிகை சிம்ரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக சிம்ரன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது