Sarkar Smoking Scene

Sarkar Smoking Scene : விஜயின் பெயரை கெடுக்கும் வகையான சர்கார் காட்சி வைக்கப்பட்டது ஏன் என முருகதாஸ் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தளபதி விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படத்தை முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பெரிய பட்ஜெட்டில் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தளபதி விஜய் புகைபடப்பிடிப்பது போல இருந்த காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இனி படங்களில் புகைபிடித்தல் மது அருந்துதல் போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறியிருந்த விஜய் மீண்டும் நடித்தது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தனர்.

தற்போது இந்த காட்சிக்கு பேட்டி ஒன்றில் முருகதாஸ் விளக்கமளித்துள்ளார். அதாவது கார்ப்பரேட் ஹெட் என்பதால் புகைபிடிக்கும் காட்சி அவசியமாக இருந்தது.

மேலும் அந்த காட்சி தவறானது தான். ஆனால அவசியம் கருதி ஏற்பாடு செய்தோம். விஜய் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் அப்படி வருவார்.

அவரை தவிர வேறு யாருக்கும் புகைபிடிக்கும் காட்சிகள் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்த காட்சியை பார்த்து விஜய் ரசிகர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here