முருகதாஸ் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.
இப்படத்தின் டீஸர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி உலக அளவில் மிக பெரிய சாதனைகளை படைத்து வருகிறது.
இவற்றின் தொடர்ச்சியாக மிக குறைந்த நேரத்தில் உலகளவில் 10 லட்சம் லைக்ஸ் வாங்கிய டீஸர் என்ற பெருமையையும் சர்கார் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக ஹாலிவுட்டில் வெளியாகி இருந்த தி இன்பினிட்டி வார் என்ற படம் படைத்து இருந்தது. இதனை தற்போது சர்கார் படம் வெறும் 292 நிமிடங்களில் முறியடித்து மெகா மாஸ் சாதனையை படைத்துள்ளது.