Sarkar Vs Viswasam

Sarkar Vs Viswasam : சர்கார் சாதனைகளை முறியடித்து ஓரங்கட்ட தற்போதே களமிறங்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலன்களான அஜித் விஜய் ரசிகர்கள் எப்போதும் போட்டியுடனே இருந்து வருகின்றனர்.

தற்போது விஸ்வாசம் படம் வெளியாக இருப்பதால் இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் சாதனைகளை சுக்குநூறாக்க வேண்டும் என களமிறங்கியுள்ளனர்.

தளபதி விஜயின் சர்கார் படம் வெளியாகிய போது கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் ஒன்று சேர்ந்து சுமார் 175 அடியில் கட் அவுட் தயார் செய்து திருவிழாவாகவே கொண்டாடினார்கள்.

தற்போது இந்த சாதனையை முறியடிக்க திருச்செந்தூரை சேர்ந்த அஜித் ரசிகர்கள் 200 அடியில் கட் அவுட் வைப்பதற்கான வேளைகளில் இறங்கியுள்ளனர்.

அதில் ஒரு சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக

Ajith Benar 1Benar 2

விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 10 முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் ட்ரைலர் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.