Sarkar Vs 2.O

Sarkar Vs 2 Point O :

மெர்சல், சர்கார், 2.O என எல்லா படமும் நஷ்டம் தான் என பிரபல தயாரிப்பாளர் கூறியிருப்பது பெரும் பரபரப்பையும் சர்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.O, தளபதி விஜயின் மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் தான் என கூறியுள்ளார்.

இது குறித்து ராஜன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, மெர்சல் படம் விநியோகிஸ்தர்களுக்கு 25% நஷ்டத்தை ஏற்படுத்திய படம் என கூறியுள்ளார்.

மேலும் சர்கார், 2 பாயிண்ட் ஓ ஆகிய படங்கள் என அனைத்தும் தயாரிப்பாளர்களுக்கு தோல்வி படம் தான். தங்களின் விளம்பரத்திற்காக பத்திரிகைகளில் நிறுவனங்கள் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள் என கூறியுள்ளார்.

இதனால் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். அவரை சமூக வளையதளங்களில் விமர்சித்தும் கருத்து கூறி வருகின்றனர்.

உண்மை என்ன என்பதை சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தான் கூற வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.