Sarkar video song Released : Thalapathy Vijay | Vijay 63 | Keerthy Suresh | AR.Murugadoss | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Sarkar video song Released :

இப்படத்தில் இடம்பெற்றுள்ள டாப் டக்கர் பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ இன்று யூ டியூபில் வெளியாகியுள்ளது.

பல தடைகளை, பல சர்ச்சைகளை கடந்து சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சுமந்துகொண்டு கடந்த ஆண்டு திரைக்கு வந்தது.

பாம்பை அடித்துக் கொன்றால் தோஷம் உண்டாகுமா?. விஷ தோஷம் பற்றி தெரிந்து கொள்வோமா!

வணிக ரீதியாகவும் சர்கார் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய மைல்கல் படமாக அமைந்தது. உலகம் முழுக்க 250 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூல் செய்து அசத்தியது.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து திடீரென ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் இடம்பெற்றுள்ள டாப் டக்கர் பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ இன்று யூ டியூபில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்திருப்பதால் இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் தற்சமயம் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி நடிப்பில் தர்பார் படத்தை இயக்கி வருகிறார்.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.