Sarkar USA Record

Sarkar USA Record : தளபதி விஜயின் அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகி இருந்த படம் சர்கார். முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இந்த படம் இந்தியாவில் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது.

இதனையடுத்து தற்போது அமெரிக்கா வசூல் நிலவரமும் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் USA நிறுவனம் வெளியிட்டு இருந்த இந்த படம் இரண்டு நாளில் ஹால்ப் மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

ஹால்ப் மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ 3.5 கோடிக்கும் அதிகமான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் எவ்வித ப்ரோமோஷனுமே இல்லாமல் சர்கார் மிக பெரிய சாதனை செய்து இருப்பது ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

மேலும் இந்த வார இறுதிக்குள் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sarkar USA Record

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.