
Sarkar USA : சர்கார் திரைப்படம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நவம்பர் 5-ம் தேதியிலேயே வெளியாகி அமெரிக்காவை அதிர வைக்க தயாராகி வருகிறது.
முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்த படம் இந்தியாவில் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தளபதி விஜயுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருப்பது எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது.
அமெரிக்காவில் இந்த படத்தை நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் USA நிறுவனம் மிக பிரம்மாண்டமாக சுமார் 200-க்கும் அதிகமான தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
நவம்பர் 5-ம் தேதி படத்தை வெளியிடுவதற்காக வேலைகளை இந்நிறுவனம் விறுவிறுப்பாக கவனித்து வருகிறது. நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவில் திட்டமிட்டபடி பிரீமியர் காட்சிகள் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த ரசிகர்கள் பலரும் தளபதியின் சர்கார் தீபாவளிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.