Sarkar USA Collection

Sarkar USA Collection : 

அமெரிக்காவில் சர்கார் படம் படைத்துள்ள புதிய வசூல் சாதனை ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருந்த படம் சர்கார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிபில் வெளியாகி இருந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார்.

வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.தீபாவளி வெளியான இப்படம் உலகம் முழுவது மிக பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

தற்போது அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூல் செய்து 1 மில்லியன் டாலர் கிளப்பில் மூன்றாவது படமாக இடம் பிடித்துள்ளது.

இதனை சர்கார் படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட கோலிவுட் மூவிஸ் USA என்ற நிறுவனமே அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது.

மேலும் நாளை அமெரிக்காவில் சர்கார் படத்திற்கு கிடைக்கும் வசூலை முழுவதுமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு கொடுத்து உதவ உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here