
தளபதி விஜயின் சர்கார் படம் அமெரிக்காவில் வரும் தீபாவளிக்கு டாப் டக்கராக வெளியாக உள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.
இந்த படம் வரும் தீபாவளிக்கு மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நர்மதா மீடியா மற்றும் கோலிவுட் மூவிஸ் USA ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் அமெரிக்காவில் மட்டுமே 200 தியேட்டர்களுக்கும் அதிகமாக ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் ஹீரோ, வில்லன் என இரு மாறுபட்ட கேரக்டேரில் நடித்திருப்பதாக முருகதாஸ் பிரபல வார இதழ் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில் கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான சர்கார் டீசரும் உலக அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.