
Sarkar Ticket Issue : தளபதி விஜயின் சர்கார் படத்திற்கு அதிக கட்டணத்தில் டிக்கெட்டை விற்பனை செய்தால் அந்த தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் நாளை முதல் தொடங்க உள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் சர்கார் படத்திற்கான டிக்கெட்களை அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டால் அந்த தியேட்டரின் உரிமையை ரத்து செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.
உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் இப்படியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
மெர்சல் படத்திற்கும் கட்டண கொள்ளை குற்றசாட்டுகள் எழுந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தியேட்டர்களில் தணிக்கை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.