
Sarkar Tamilisai Comment : திருட்டு கதையில் கள்ள ஒட்டு விழிப்புணர்வா என தளபதி விஜயை தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சொந்தராஜன் கிண்டலடித்துள்ளார்.
தளபதி விஜய் நடித்துள்ள படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
படத்தில் கள்ள ஓட்டை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கதை அமைந்துள்ளது. படத்தின் விஜய் அரசியல் பற்றி இறங்கி பேச உள்ளார்.
இந்நிலையில் தமிழிசை அளித்த பேட்டி ஒன்றில் திருட்டு கதையை எடுத்து விட்டு அதில் அதில் கள்ள ஒட்டு பற்றி படமா? நேர்மையா இருங்க விஜய்.
கனவில் தான் உங்களால் முதல்வராக முடியும். இது கார்பரேட்காரர்களுக்கான ஆட்சி அல்ல காமன் மேன்களுக்கான ஆட்சி என கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்களோ மெர்சல் படத்திற்கு ரிலீசுக்கு பிறகு தான் ப்ரோமோஷன் செய்தீர்கள். சர்க்கார் படத்திற்கு இப்போதே தொடங்கி விட்டீர்களா? என பதிலுக்கு தமிழிசையை கிண்டலடித்து வருகின்றனர்.