தளபதி விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தின் சிங்கிள் டிராக் வரும் செப்டம்பர் 24-ம் தேதியும் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 2-ம் தேதியும் நடைப்பெற உள்ளது.

ஆனால் தளபதி ரசிகர்களால் சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி வரை கூட காத்திருக்க முடியாமல் சன் பிக்சர் நிறுவனம், இயக்குனர், பாடலாசிரியர் விவேக் என அனைவரிடமும் அப்டேட் கேட்டு அன்பு தொல்லை செய்து வருகின்றனர்.

இதனால் பாடலாசிரியர் விவேக் சிங்கிள் டிராக்கிற்கு முன்பாகவே பாடலின் சில வரிகளையாவது வெளியிடுமாறு பரிந்துரை செய்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

இதனால் இன்றே சர்கார் பர்ஸ்ட் டிராக்கின் சில வரிகள் வெளியாக வாய்ப்புள்ளதாக.எதிர்பார்க்கப்படுகிறது .