Sarkar Success Party

Sarkar Success Party : தளபதி விஜய் சர்கார் வெற்றி பெற்றதற்காக கேக் கட் செய்து படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

அதிலும் தமிழக அரசை விமர்சனம் செய்யும் வகையில் கேக் உருவாக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்திருந்தார். தீபாவளிக்கு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட பொருட்களை தீயிலிட்டு எரித்த காட்சிகள் இடம் பெற்று இருந்தது ஆளும் கட்சியான அதிமுக-விற்கு கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து படத்தில் இருந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் நேற்று தளபதி விஜய் படக்குழுவினருடன் சர்கார் படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார்.

அப்போது கேக் கட் செய்துள்ளனர். அந்த கேக்கில் மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட இலவச பொருட்கள் இடம் பெற்றுள்ளனர். அவற்றில் விளக்கு ஏற்றுவது போல அந்த கேக் உருவாக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை பாருங்க.

Sarkar Success Party