Sarkar Story Theft

Sarkar Story Theft : சர்கார் படத்தால் எனக்கு தான் பிரச்சனை என பிரபல இயக்குனர் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவருமான கே.பாக்யராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்த படம் வரும் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை என்னுடைய என சர்க்கார் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் உதவி இயக்குனரான வருண் ராஜேந்தர்.

இவர் எழுத்தாளர் சங்கத்திலும் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்திருந்தார்.

எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான கே.பாக்யராஜ் இருவரின் கதையையும் ஒப்பிட்டு பார்த்து விட்டு ஒரே மாதிரியாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து பாக்யராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சர்கார் படத்தால் எனக்கு தான் பிரச்னை. என் பையன் சாந்தனு விஜயோட தீவிர ரசிகன் என்பதால் வீட்ல என்கிட்ட பிரச்சனை பண்ணுவான்.

அதுமட்டுமில்லாமல் அவங்க அம்மா மூலமாகவும் என்கிட்ட சண்டை போடுவான். இருந்தாலும் என்னால முடிந்த அளவுக்கு இந்த விவகாரத்துல நேர்மையாக தான் நடந்துள்ளேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.