Bhagyaraj Vs Sarkar

Bhagyaraj Vs Sarkar : சர்கார் படத்தின் மொத்த கதையையும் இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட்டதால் படக்குழுவினர் அப்செட்டில் உள்ளனர்.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள படம் சர்கார்.

இந்த படத்தை கதை என்னுடையது. நான் செங்கோல் என்ற பெயரில் கடந்த 2007-லேயே திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன் என கூறியிருந்தார்.

இரண்டு கதையையும் ஒப்பிட்டு பார்த்ததில் ஒரே மாதிரியாக இருப்பதாக எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்கியராஜ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து பாக்யராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படத்தின் மொத்த கதையையும் கூறி விட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்யராஜ் கூறியதாவது, விஜய் ஒரு அமெரிக்காவில் வாழும் இந்தியன். சட்டமன்ற தேர்தலுக்காக இந்தியா வருகிறார். ஒட்டு போட சென்ற போது அவரது ஓட்டை வேறொரு கட்சியினர் கள்ள ஓட்டாக போட்டிருப்பார்கள்.

தன்னை ஒட்டு போட அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கெஞ்சியும் ஒட்டு போட முடியாது என கூறி விடுகின்றனர். இதனையடுத்து விஜய் வழக்கு தொடர இந்த தேர்தல் ரத்தாகிறது.

இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசியலை பத்தி உனக்கு என்ன தெரியும்? செலவு பண்ண மொத்த காசும் போச்சு.. இதெல்லாம் யார் தருவா? என விஜயிடம் முறைத்து கொள்கின்றனர்.

இதனையடுத்து அடுத்த இடை தேர்தலில் விஜய் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட இரண்டு தரப்பினரும் சமமான ஓட்டுகளை பெறுகின்றனர்.

இப்பொது யாரவது ஒருவர் ஆட்சியமைக்க விஜயின் ஆதரவு தேவைப்படுகிறது. இருவரும் விஜயிடம் வந்து நீங்களே முதல்வராக இருங்க என தங்களுக்கு ஆதரவு கேட்கின்றனர்.

இறுதியில் விஜய் உங்களோட சேர்ந்தா மக்களுக்கு உதவி செய்ய முடியாது என கூறி நான் வெளியில் இருந்தே தவறுகளை தட்டி கேட்கிறேன் என மக்களுக்காக போராடுகிறார். இது தான் படத்தின் கதை என பாக்யராஜ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here