Sarkar Story, Sarkar Vijay

Sarkar Story : முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜயின் சர்கார் படத்தின் கதை குறித்த அதிர்ச்சி அறிக்கை ஒன்றை எழுத்தாளர் சங்கம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்துள்ளார்.

முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷும் வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர்.

அதே போல ராதா ரவி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் எழுத்தாளர் வருண் ராஜேந்தர் என்பவர் சர்கார் படத்தின் கதை என்னுடையது.

செங்கோல் என்ற பெயரில் நான் எழுதிய கதையை திருடி முருகதாஸ் சர்கார் படத்தை உருவாக்கியுள்ளார் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதற்கு முன்னதாக எழுத்தாளர் சங்கத்திலும் புகார் அளித்திருந்தார். இந்த இரண்டு கதைகளையும் ஒப்பிட்டு பார்த்த எழுத்தாளர் சங்கம் இரண்டு கதையும் ஒரே மாதிரி தான் உள்ளது. இதனால் வருண் ராஜேந்தர் மேற்கொண்டு இந்த புகார் மீது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லலாம் என கூறியுள்ளது.

மேலும் வருணின் அடுத்த கட்ட நடவடிக்கையில் எழுத்தாளர் சங்கம் தலையீடாத எனவும் வருண் அவர்களுக்கு முழுமையாக உதவாமல் போனதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளது.

Sarkar Story

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.