
Sarkar Story Issue : சர்கார் படத்தின் கதை என்னுடையது, முருகதாஸ் திருடி படமாக்கி விட்டார் என வருண் ராஜேந்திரன் தொடர்ந்திருந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது .
இந்த படத்தின் கதை என்னுடையது. செங்கோல் என்ற பெயரில் நான் எழுதி ஏற்கனவே எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன் என அவரது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் வரும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த வழக்கின் இறுதிக்கட்ட தீர்ப்பு அக்டோபர் 31 அல்லது அதற்கு மேல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தீபாவளிக்கு படம் வெளியாகுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இறுதி தீர்ப்பில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.