தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் நேற்று யூ ட்யூபில் வெளியாகி ட்ரெண்டாகி இருந்தது. இப்பாடல் வெளியான 1 மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

தற்போது வரை இப்பாடல் யூ ட்யூபில் 3 மில்லியன் பார்வையாளர்களுக்கும் அதிகமாக பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் 418K  லைக்ஸ்களை வாங்கி குவித்துள்ளது.

ஆரம்பத்தில் தளபதி ரசிகர்களுக்கே பாடல் வரிகள் புரியவில்லை என்பதால் இது என்னடா பாட்டு என புலம்பத் தொடங்கினர்.

அதன் பின்னர் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க என்னா பாட்டு டா இது என பாடலை கொண்டாடி வருகின்றனர்.