Sarkar Running Time

Sarkar Running Time : தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து சர்கார் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவலும் கிடைத்துள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என தெரிய வந்துள்ளது.

இதனையறிந்த தளபதி ரசிகர்கள் 2 மணி நேரம் 45 நிமிடமும் எங்களுக்கு தளபதி தரிசனம் தான் என மகிழ்ச்சியுடன் கூறி கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here