
Sarkar Grand Release : விஜயின் சர்கார் படம் 80 நாடுகள் 5 கண்டங்களில் ரிலீசாக இருப்பது தெரிய வந்துள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, பழ. கருப்பையா, யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தீபாவளி ரிலீசாக நவம்பர் 6-ம் தேதி வெளியாக உள்ளது.
அமெரிக்காவில் இந்த படத்தை வெளியிடுவதற்கான வேலைகளை நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் USA என்ற நிறுவனம் மும்மரமாக பார்த்து வருகிறது.
அதே போல் போலந்து நாட்டில் சர்காரை 7th சென்ஸ் சினிமாட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த நாடுகள் மட்டுமில்லாமல் மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, உக்ரைன், துபாய் என 80-க்கும் அதிகமான நாடுகளில் வெளியாக உள்ளது.
அமெரிக்காவில் மட்டுமே 200-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக வெளியாகி இருந்த மெர்சல் படம் கூட அமெரிக்காவில் 126 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி இருந்தது.
மொத்தமாக சர்கார் 5 ரிலீஸ் கண்டங்கள் 80 நாடுகள் என இந்திய திரையுலகையே அதிர வைத்துள்ளது.
இதனால் விஜயின் திரைப்பயண வரலாற்றிலேயே சர்கார் தான் மிக பெரிய ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.