Sarkar Release Coimbatore

Sarkar Release Coimbatore :

சர்கார் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்யுமாறு விநியோகிஸ்தர் தரப்பில் வற்புறுத்தப்பட்டதால் படத்தை ரிலீஸ் செய்ய மறுத்திருப்பதாக பிரபல திரையரங்கள் ஒன்று பரபரப்பு டீவீட்டை பதிவு செய்துள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் சர்கார்.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ள இந்த படம் நாளை முதல் திரைக்கு வருகிறது.

பொதுவாகவே அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் படத்தின் டிக்கெட்டுகளை மார்க்கெட்டில் கள்ள டிக்கெட்டாக 1000-க்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்வது வாடிக்கையான ஒன்றாகி வருகிறது.

இப்படியான செயல்களுக்கு சில தியேட்டர் உரிமையாளர்களும் துணையாக இருந்து வருவது அநீதியின் உச்சம்.

ரசிகர்களும் தங்களது பேவரைட் நடிக்கறியுந் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் எவ்வளவு தொகையாக இருந்தாலும் வாங்கி விடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது கோயம்புத்தூரை சேர்ந்த திரையரங்கம் ஒன்று பதிவிட்டுள்ள டீவீட்டில் சர்கார் படத்தின் டிக்கெட்டுகளை கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வற்புறுத்தினர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.