
Sarkar Promo 6 : சர்கார் படத்தின் 6-வது ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சர்கார் படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்திற்காக ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தினம் ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 6-வது ப்ரோமோவில் வரலட்சுமி விஜயை அவன் சாதாரண ஆள் இல்லை என கூறுகிறார்.
விஜய் செம மாஸான கியூட்டான லுக்கில் தெறிக்க விடுகிறார். ஆக்ஷனிலும் மெர்சல் காட்டுகிறார். இதோ நீங்களே பாருங்க..
