Sarkar Overseas Release

Sarkar Overseas Release : தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படம் உலகம் முழுவதும் மொத்தம் 80 நாடுகளில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் சர்கார்.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி. யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படம் அமெரிக்க, ஆஸ்திரேலியா, போலந்து, மெக்சிகோ என உலகம் முழுவதும் மொத்தம் 80 நாடுகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளில் மட்டுமே மொத்தம் 1200 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. விஜயின் படம் வெளிநாடுகளில் அதிகமான தியேட்டர்களில் வெளியாவது முதல் முறை என கூறப்படுகிறது.

இந்த படத்தை அமெரிக்காவில் நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் USA ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிடுவதும் போலந்தில் 7th சென்ஸ் சினிமாட்டிக்ஸ் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.