Sarkar Record

Sarkar Record : சர்கார் படம் புதிய சாதனை படைத்துள்ளது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த படம் சர்கார்.

இந்த படம் கடந்த நவம்பர் 6-ம் தேதி தீபாவளி அன்று வெளியாகி இருந்தது.

படத்தில் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக கூறி அக்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தன.

தியேட்டர்கள் முன்பு அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் போராட்டங்களை நடத்தி வந்ததால் பல்வேறு இடங்களில் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டு இருந்தது.

அப்படி இருந்தும் தற்போது சர்கார் படம் ரூ 150 கோடி வசூல் செய்து 150 கோடி கிளப்பில் இணைந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்றும் நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் படத்தில் வசூல் இன்னும் அதிகரிக்கும் விரைவில் ரூ 200 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பிலும் இடம் பிடிக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.