தளபதி விஜயின் சர்க்கார் திரைப்படம் டிஆர்பி ரேட்டிங்கில் சாதனை படைத்துள்ளது.
Sarkar Movie Record in TRP : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் எல்லையில்லா எதிர்பார்ப்பு உண்டு.
படம் ரிலீசாகும் போது மட்டும் அல்லாமல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போதும் ரசிகர்கள் டிஆர்பி முதலிடம் பிடிக்க வைக்க முயற்சி செய்வார்கள்.
பெரும்பாலான விஜய்படங்கள் டிஆர்பி இல் தொடர்ந்து சாதனை படைத்துள்ளனர். அந்தவகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பான சர்க்கார் திரைப்படம் அந்த சேனல் டிஆர்பி-ல் முதலிடம் பிடித்துள்ளது.
இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினரான பிரிட்டோ மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.