
Keerthy Suresh Decison : சர்கார் படத்தின் விளைவால் கீர்த்தி சுரேஷ் அதிரடியான முடிவை எடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசத் தொடங்கியுள்ளனர்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இதுவரை படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று கூறி தான் நடிக்க ஒப்பு கொண்டு வருகிறார்.
சர்கார் படத்திலும் அதே நம்பிக்கையுடன் ஒப்பு கொண்டுள்ளார். ஆனால் படம் வெளியான பிறகு அவருடைய கதாபாத்திரத்துக்கு பெரியதாக மவுசு இல்லை என்பதும் தெரிந்ததும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சர்கார் படத்தில் முருகதாஸ் தன்னை ஒரு பொம்மையாக பயன்படுத்தி கொண்டுள்ளார் என நெருங்கிய நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்.
இதனால் இனி வரும் படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் தான் நடிப்பேன் என முடிவெடுத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷின் இந்த முடிவு அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. ரசிகர்களும் இதை அப்படியே பின்பற்றுங்கள் என கூறி வருகின்றனர்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது ஓய்வில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.