
Sarkar Movie Issue : சர்கார் ஓடாத படம் இதற்கு ஏன் பேனர்களை கிழித்து நாமே ஓட வைக்க வேண்டும் எனவும் அஜித்தை சந்தித்து அரசியலில் ஆதரவு கேட்பேன் எனவும் பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த படம் சர்கார். இந்த படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளி அன்று வெளியாகி இருந்தது.
படத்தில் அதிமுகவை கிண்டலடிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்ததால் அவற்றை நீக்க வேண்டும் என கண்டனங்கள் வலுத்தது.
அதன் பின்னர் படத்தில் இருந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இதனால் சர்கார் பட பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் தற்போது நடிகர் ரஞ்சித் சர்கார் படத்தை விமர்சனம் செய்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித் சர்கார் ஓடாத படம், அதற்கு ஏன் பேனர்களை கிழித்து ஓட வைக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ரஞ்சித் தல அஜித்தை சந்தித்து தான் உள்ள கட்சியில் சேருமாறு கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.