
Sarkar Story : சர்கார் படத்திற்கு தடை விதிக்குமாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.
முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
ஏற்கனவே வருண் ராஜேந்திரன் என்பவர் சர்காரின் கதை என்னுடையது.
நான் செங்கோல் என்ற பெயரில் இந்த கதையை எழுதி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன் என கூறி இருந்தார்.
அதன் பின்னர் எழுத்தாளர் சங்கத்தில் இருவரின் கதையையும் ஒப்பிட்டு பார்த்த பொது ஒரே மாதிரியாக இருப்பதாகவும் தகவல்கள் வைரலாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது ராஜேந்திரன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இந்த படத்தை தடை விதிக்க கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் வழக்கு தொடுக்க சென்றிருந்த ராஜேந்திரன் மனுவை ஏற்று கொண்ட நீதிபதி எம்.சுந்தர் இந்த மனுவை ஏற்று கொண்டு இன்று விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
