Sarkar Mini Review

Sarkar Mini Review : சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.

உலகம் முழுவதும் இன்று தீபாவளி விருந்தாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வாழும் தமிழன் தளபதி தளபதி (சுந்தர் ) மிக பெரிய நிறுவனத்தின் CEO-வாக இருந்து வருகிறார்.

செம மாஸ் அண்ட் கிளாஸ் லுக்கில் மாஸான பிளே பாயாக வலம் வரும் விஜய் இந்திய தேர்தலில் தன்னுடைய ஓட்டை பதிவு செய்வதற்காக இந்தியா வருகிறார்.

ஆனால் இவருடைய ஓட்டை ராதா ரவியின் அரசியல் கட்சியினர் கள்ள ஓட்டாக பதிவு செய்திருப்பார்கள். இதனால் அரசியல் வாதிகளுக்கும் விஜய்க்கும் இடையே நடக்கும் போராட்டமே படத்தின் கதை.

முருகதாஸின் கதை, திரைக்கதை, வசனங்கள் படத்திற்கு மேலும் மெருகூட்டியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் BGM, பாடலாசிரியின் விவேக்கின் பாடல்கள் மீண்டும் ஒரு மேஜிக்கை நிகழ்த்தியுள்ளது.

விஜய் பேசும் அரசியல் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கின்றன. ஆக்ஷன், லவ், ரொமான்ஸ், அரசியல் வசனம் என அனைத்திலும் தளபதி மிரட்டி தெறிக்க விட்டுள்ளார்.

ராதா ரவி, வரலட்சுமியின் வில்லத்தனமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் என்றே கூறலாம்.

யோகி பாபுவின் காமெடி, கீர்த்தியின் நடிப்பு ஆகியவை கொஞ்சம் மிஸ் ஆவது போல் தோன்றுகிறது.

இருப்பினும் மொத்தத்தில் சர்கார் தளபதி ரசிகர்களுக்கு மிக பெரிய தீபாவளி விருந்து.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.