
இன்று மாலை சர்க்கார் அப்டேட்ஸ் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இன்று கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் என்பதால் சர்கார் படத்தின் புதிய அப்டேட் அல்லது புகைப்படங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கீர்த்தி சுரேஷிற்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கீர்த்தியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக சர்கார் அப்டேட் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.