
சர்கார் கொண்டாட்டம்: தளபதி விஜயின் சர்க்கார் படத்தை முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா, போலந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. அதற்கான வியாபாரமும் சிறப்பாகவே நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் நாளை அமெரிக்காவில் சர்கார் படம் வெளியாக உள்ள தியேட்டர்களின் லிஸ்ட் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவில் இந்த படத்தை நர்மதா ட்ராவல்ஸ் அண்ட் கோலிவுட் மூவி USA என்ற நிறுவனம் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

@SarkarMovieOffl @SarkarFilm @ARMurugadoss @sunpictures #sarkarinusa @sarkarinusa @VijayFansUpdate @VijayFansClub pic.twitter.com/V388LuJqBM
— Kollywood Movies USA (@sarkarinusa) October 23, 2018