Sarkar Varun Rajendhar

Sarkar Varun Rajendhar :  சர்கார் கதை என்னுடையது என பரபரப்பை கிளப்பி இருந்த வருண் ராஜேந்தர் என்ற உதவி இயக்குனருக்கு தற்போது மிக பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குனர் வருண் ராஜேந்தர் நீதிமன்றம் வரை சென்று இருந்தார்.

இறுதி கட்டத்தில் வருணும் முருகதாஸும் சமரசமாகி விட்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிரபல முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ். தாணு அளித்துள்ள பேட்டி ஒன்றில் வருண் ராஜேந்திரனுக்கு தான் வாய்ப்பு கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

எஸ். தாணு அவர்கள் கொடுக்கும் வாய்ப்பை வருண் ராஜேந்திரன் பயன்படுத்தி கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here