Sarkar Cutout

Sarkar CutOut : பிரம்மாண்ட சாதனை புடைத்திருந்த சர்கார் படத்திற்கான விஜயின் கட் அவுட் ஒரே நாளில் தரைமட்டமாக சரிந்து விழுந்தது ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் ரசிகர்கள் அதிகம்.

தமிழகத்திற்கு நிகராக கேரளாவிலும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தமிழகத்திற்கு அடுத்த படியாக தளபதியின் கோட்டை என்றால் அது கேரளா தான் என சிறு குழந்தை கூட சொல்லும்.

நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ள சர்கார் படத்திற்காக கேரளாவில் ரசிகர்கள் விஜய்க்கு 175 அடியில் கட் அவுட் வைத்திருந்தனர்.

அந்த வீடியோ இணையத்திலும் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த கட் அவுட் தரைமட்டமாக்க கீழே சரிந்து விழுந்துள்ளது.

முதல் முறையாக 175 அடியில் விஜய்க்கு தான் கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த கட் அவுட்டால் 2 நாள் கூட தாக்கு புடிக்க முடியவில்லை என்பது தான் ரசிகர்களுக்கு வருத்தமான ஒன்றாக உள்ளது.

Sarkar

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.