Sarkar Scenes Deleted

Sarkar Scenes Deleted : தளபதி விஜயின் சர்கார் படத்தில் இருந்து சர்ச்சையான காட்சிகள் நீக்கி மறுதணிக்கை செய்துள்ளது தணிக்கை குழு.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சர்கார்.

இந்த படத்தில் ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் இலவச பொருட்களை இழிவுபடுத்தும் வகையில் விமர்சனம் செய்து இருந்தனர். இதனால் அதிமுக தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வந்தன.

சன் பிக்சசர்ஸ் நிறுவனமும் சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சையான காட்சிகளை நீக்குவதாகவும் கூறியிருந்தது.

இதனையடுத்து தற்போது அந்த சர்ச்சை காட்சிகளை நீக்கி மறுதணிக்கை செய்து படத்தை வெளியிட்டுள்ளது தணிக்கை குழு.

இன்று மதியம் முதல் மறுதணிக்கை செய்த படமே தியேட்டர்களில் திரையிடப்படும் எனவும் தகவல் கிடைத்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு கண்டனங்கள் வலுத்து வருவதால் அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சர்கார் காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடையந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here