KKS Vs Sarkar

Sarkar Vs KKS : சர்கார் படத்தின் வசூல் கடைக்குட்டி சிங்கம் படத்தின் வசூலை கூட தொடவில்லை என பிரபல திரையரங்கம் ஒன்று கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தளபதி விஜய். இவரது நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சர்கார்.

பல்வேறு இடங்களில் வசூல் வேட்டையாடி சாதனை படைத்து வந்தது. பல தியேட்டர்கள் கடந்த 2018-ம் ஆண்டின் டாப் வசூல் படங்கள் லிஸ்டை வெளியிட்டு வருகின்றன.

பெரும்பாலான தியேட்டர்களில் சர்க்கார் அல்லது 2 பாயிண்ட் ஓ படம் தான் முதலிடத்தை பிடித்து இருந்தது.

ஆனால் திருப்பூரில் உள்ள பிரபல திரையரங்கம் வெளியிட்டுள்ள லிஸ்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த லிஸ்டில் முதலிடத்தில் 2 பாயிண்ட் ஓ படமும் இரண்டாம் இடத்தில் கடைக்குட்டி சிங்கம் படமும் பிடிக்க மூன்றாம் இடத்தில் தான் சர்கார் படம் உள்ளது.

இந்த லிஸ்ட் அப்பகுதியில் உள்ள தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here