Sarkar Collection Record

Sarkar Collection Record : படம் வெளியான இரண்டே நாளில் சர்கார் படைத்துள்ள சாதனை திரையுலகையே மிரள வைத்துள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த படம் சர்கார்.

பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருப்பினும் தளபதி ரசிகர்களால் படத்தின் வசூலுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் தொடர் சாதனை நிகழ்த்தி வருகிறது.

முதல் நாளில் மட்டுமே சென்னையில் ரூ 2 கோடி வசூல் செய்து மிக பெரிய வரலாற்று சாதனை படைத்தது.

இதனையடுத்து தற்போது இப்படம் இரண்டே நாளில் ரூ 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

விஜயின் நடிப்பில் வெளியாகி 100 கோடி வசூலை தாண்டிய படங்களின் எண்ணிக்கை சர்கார் படத்தோடு சேர்த்து ஆறாக மாறியுள்ளது.

இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த வார இறுதிக்குள் 200 கோடி வசூல் செய்து புதிய மைல் கல்லை தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here